தூத்துக்குடி : கயத்தாறு, அக்.10- கயத்தாறு சுங்கச்சாவடியில் லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவர் உள்ளேயே இறந்து கிடந்தார். இவர் நேற்று முன்தினம் சிவகாசியில் இருந்து திருநெல்வேலி சரக்கு ஏற்றுவதற்காக லாரி டிரைவர் வேல்பாண்டி வயது (51). இவர் நேற்று மதியம் 3 மணியளவில் கயத்தாறு சுங்கச்சாவடியில் சாப்பிட்டு விட்டு மனைவியிடம் செல்போனில் பேசி விட்டு சுங்கச்சாவடியில் சிறிது நேரம் தூங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் இவருக்கு மூச்சு தின்றால் நெஞ்சுவலி வந்ததாக தெரிகிறது. அப்படியே படுத்தபடி இறந்து விட்டார். இவரைலோடு ஏற்ற வரவில்லை என தேடிய போது சுங்கச்சாவடியில் லாரி நிற்பதை கண்டு லாரியில் ஏற்றி பார்த்தபோது அவர் இரண்டு பக்கமும் கதவுகளை பூட்டிவிட்டு உள்ளே இருப்பது தெரிந்து கயத்தாறு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் கயத்தாறு சப் இன்ஸ்பெக்டர் குருசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இறந்து போன வேல் பாண்டி மதுரை செக்காரவூரணி பகுதியை சேர்ந்த கண்ணித்தேவர் மகன் வேல் பாண்டி என்பது தெரிய வந்தது. இறந்து போன வேல் பாண்டிக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். இது குறித்து அவரது உடலை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது