சேலம் : பாலக்காட்டை சேர்ந்ததவர், சமீர், (27), இவர், கடந்த ஏப்., 14ல், அங்குள்ள லாரியில் மாங்காய் லோடு ஏற்றிக்கொண்டு பெங்களுரு சென்றார். அங்கு, ‘லோடை’ இறக்கி விட்டு, காலை, 11:15 மணிக்கு, சேலம், பெங்களூரு பைபாஸ் திருவாக்கவுண்டனுார், மேம்பால இறக்கத்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது, ‘இன்னோவா’ காரில் வந்து குறுக்கே நிறுத்திய, ஏழு பேர் கும்பல், கத்திமுனையில் சமீரை கடத்திச்சென்றனர்.
அவரிடம், 5,000 ரூபாய், இரு மொபைல் போன்களை, பறித்துக்கொண்டனர். தொடர்ந்து, அவரை கரூரில், இறக்கி விட்டு, லாரியை கடத்திச்சென்றனர். இதுகுறித்து சமீர், புகார்படி, சேலம், சூரமங்கலம், காவல் துறையினர், தனிப்படை அமைத்து விசாரித்தனர். அதில், கேரளா மாநிலம், திருச்சூரை சேர்ந்த, சிர்ஜான், (39), உன்னிகண்ணன், (31), எர்ணாகுளம் பிஜிஸ் பாஸ்கரன், (39), ஆகியோரை நேற்று, காவல் துறையினர், கைது செய்தனர். மேலும், நான்கு பேரை தனிப்படை காவல் துறையினர், தேடுகின்றனர்.