கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், காணிமடம் பகுதியில் லாரி ஓட்டுநர்களுக்கான போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்து, லாரி ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகளின் அவசியத்தை விளக்கினார். பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் மெதுவாக ஓட்டுதல், செல்போன் பயன்படுத்தாமல் வாகனம் இயக்குதல், அதிகபாரம் ஏற்றிச் செல்வதை தவிர்த்தல், அனுமதி இல்லாமல் வாகன அமைப்பை மாற்றக்கூடாது உள்ளிட்ட முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட வாகன விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு 50% குறைந்துள்ளதென போலீசார் தெரிவித்தனர். 70-க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி, ‘விபத்தில்லா குமரி’ முயற்சியின் தொடர்ச்சியாக தொடர்ந்து நடைபெறும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
















