திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள மணிமண்டபத்தில் ஒண்டி வீரன் சிலைக்கு அஞ்சலி செலுத்த, விருதுநகர் மாவட்டப் பகுதிகளிலிருந்து திருநெல்வேலிக்கு கடந்த 20ஆம் தேதி ஒரு அமைப்பினர் வாகனத்தில் அணிவகுத்து வந்தனர். அப்போது, அவர்கள் கங்கைகொண்டான் துறையூா் பாலம் அருகே பழுதாகி நின்ற லாரியின் கண்ணாடிகளை உடைத்து பிரச்னையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கங்கைகொண்டான் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விருதுநகர் மாவட்டம் மடத்துப்பட்டியைச் சேர்ந்த காளிமுத்து (19). சாத்தூரை சேர்ந்த துரைபாண்டி (24). கருப்பசாமி (20). கணேஷ் (20). வெற்றிவேல் (40). மற்றும் 2 சிறுவா்களை கைது செய்தனர். மேலும், பொது விழாக்கள், நினைவஞ்சலி நிகழ்வுகளுக்கு தனியாகவோ அல்லது அமைப்பு சார்பாகவோ வருவோர் சட்டம்- ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N..சிலம்பரசன், இ.கா.ப., எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்