தருமபுரி : தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம், கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக காரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளர் திரு. வெங்கடராமன் உதவி ஆய்வாளர் திரு. ஜவகர், மற்றும் போலீசார் தலைமையில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். காரிமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்தனர். சோதனையின் போது டிஷ்யூ பேப்பர் மூட்டையுடன் சேர்த்து மறைத்து வைத்திருந்த தடை செய்யப்பட்ட ரூ.10.25 லட்சம் மதிப்பிலான சுமார் 1500 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர்.