திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் தொடர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக தகவல் வந்தது. இதையடுத்து பழனி காவல் துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி தனஜெயன் அதிரடி உத்தரவின் பேரில் ஆயக்குடி காவல் ஆய்வாளர் கவிதா,சார்பு ஆய்வாளர் ஆனந்த் மற்றும் காவலர்கள் லாட்டரி விற்பனை செய்த நான்கு நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் 1000க்கும் மேற்பட்ட கேரளா லாட்டரியை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா