தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் நகர பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலை ஓரத்தில் சந்தேகத்து இடமாக நின்று கொண்டு இருந்த இரு நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அரூரை சார்ந்த பல்லவரசு 38. அக்பர் ஷெரீப் 29. தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது அவர்களிடம் இருந்த ரூ. 45,630 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.