திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர், ஆனந்த் பாலசுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, மன்னார்கோவில் உரக்கடை அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த மன்னார் கோவில், கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த தாமஸ் அசரியா (44). என்பவரை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் 7,120 மதிப்புள்ள கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்ததை யடுத்து உதவி ஆய்வாளர், ஆனந்த் பாலசுப்ரமணியன் தாமஸ் அசரியாவை கைது செய்தார். மேலும், அவரிடமிருந்து ரூபாய் 7,120 மதிப்புள்ள கேரள மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்