திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செந்துறை அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மருங்காபுரி கருமலையான் மணக்காட்டூர் சிக்கந்தர் ஆகிய இருவரையும் நத்தம் காவல் சார்பு ஆய்வாளர்கள் கிருஷ்ணகுமார், தர்மர் தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதேபோல் சாணார்பட்டி பகுதியில் லாட்டரி விற்பனை ஈடுபட்ட வி.எஸ்.கோட்டையைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை சாணார்பட்டி சார்பு ஆய்வாளர் பொன்.குணசேகரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட எஸ்பி, ரூரல் டிஎஸ்பி ஆகியோரின் கடுமையான நடவடிக்கையினால் நத்தம் கோபால்பட்டி செந்துறை பகுதிகளில் லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கைது நடவடிக்கை அதிரடியாக இருப்பதால் லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா