திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு அருகே கோவிலூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது அந்தப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த முருகேசன்(53). என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள 710 அஸ்ஸாம் லாட்டரி சீட்டுகள், ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து எரியோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இது குறித்து எரியோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா