கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது சரோஜினி தேட்டர் உள்ள ஆவின் பால் கடை அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்த போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.