காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.M.சுதாகர், அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வணிகர் வீதியில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டினை ராஜ்குமார் (42) , கிழக்கு பல்லவர்மேடு, காஞ்சிபுரம் என்பவர் விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மேற்படி லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
மேலும், காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு, கள்ளத்தனமாக மது விற்பனை போன்ற குற்றச் செயல்களில் எவர் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.