மதுரை : மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டம், பேரையூர் காவல் நிலைய சரகம் பேரையூர் மாக்கெட் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை இரண்டு நபர்கள் தினமும் விற்பனை செய்து வருவதாக இரகசிய தகவல்கள் வந்தபடியால் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் மேற்பார்வையில் சார்பு ஆய்வாளர் திரு.சத்தியவேந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணித்து வந்த நிலையில் இன்று (26.11.2023)-ம் தேதி பேரையூர் மார்க்கெட் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பேரையூர் சுப்பிரமணி கோவில் தெருவைச் சேர்ந்த சீனிமூசாவுராவுத்தர் மகன் ரஹிம் என்பவர் பிடிபட்டார்.
அவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் 496-ம் லாட்டரி சீட்டுகள் விற்ற பணம் ரூபாய் 1350/-ம் கைப்பற்றப்பட்டு அவரை விசாரணை செய்ததில் தேனிமாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கோவிந்தன்பட்டியை சேர்ந்த நாகூர்கனி மகன் முகமதுகனி என்பவரிடம் வாங்கி வந்து விற்பனை செய்வதாக சொன்னதால் மேற்படி நபரை அழைத்துக்கொண்டு தனிப்படை தேனி மாவட்டம் சென்று ரஹீம் அடையாளம் காட்டிய நாகூர்கனி மகன் முகமதுகனி என்பவரை பிடித்தபோது அவரிடமிருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் 240-ம் கமிஷன் பணம் ரூபாய் 740-ம் கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்தால் அதை தொடர்ச்சியாக வாங்குபவர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவந்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது உத்தரவின் பேரில் ரோந்து காவலர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்