திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நத்தம் புதூர் பிரிவு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நத்தம் களத்துப்பட்டியை சேர்ந்த சின்னத்தம்பி(59). என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.11,50,000 மதிப்புள்ள 7,500 லாட்டரி சீட்டுகள் பணம் ரூ.2000, 1 செல்போன், 1 டூ வீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்து நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான நத்தம், சேர்வீடு பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















