அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மேல குடியிருப்பு ரோட்டுத்தெரு பகுதியில், சந்தேகத்திற்கு இடமாக திரிந்த ஒருவரை ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் திரு. இளங்கோவன், தலைமையிலான காவல் துறையினர் , பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பு ரோட்டு தெருவை சேர்ந்த விஜயகுமார்(55), என்பதும், அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் , லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.