திண்டுக்கல் : திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக எஸ்.பி.பாஸ்கரன் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நிலக்கோட்டை டி.எஸ்.பி.முருகன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வத்தலகுண்டு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பாலச்சந்தர், சின்னதுரை, பாலமுருகன், சின்னகாளை ஆகிய நான்கு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.9260 பணம், சிங்கம், ரோசா, தங்கம், குயில், நல்லநேரம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களை கொண்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா