தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பனஅள்ளிகோம்பை கிராமத்தை சேர்ந்த ராமன் 41. என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ராமன் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. பின்னர் ராமனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.300 மதிப்புள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.