திண்டுக்கல்: A.வெள்ளோட்டை சேர்ந்த ஜெயந்தி மற்றும் பாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவர்களை மர்ம நபர்கள் TATA Capital கம்பெனியிலிருந்து கடன் வாங்கித் தருவதாக கூறி ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி விபரங்களை பெற்று முறையே ரூ. 51,548/- மற்றும் ரூ. 55,858/- மொத்தம் ரூ. 1,08,406/- பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பாஸ்கரன் அவர்களின், உத்தரவுப்படி திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர். சந்திரன் அவர்களின், மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர்.மீனா அவர்கள், மற்றும் திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து ரூ.1,08,406/- பணத்தை மீட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா