திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு. டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்தில் இருந்த சார்பதிவாளர் ஆனந்தி அவர்களின் சாப்பாட்டு பையில் கணக்கில் வராத ரூ.85,500 பணத்தை கைப்பற்றினர். மேலும் இது தொடர்பாக சர்பதிவாளர் ஆனந்தி, ஊழியர் முத்துச்சாமி மற்றும் பத்திர எழுத்தர் சௌந்தரபாண்டியன் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி. நாகராஜன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















