மதுரை : மதுரை மாவட்டம், மேலூர் அருகே கச்சிராயன்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுபவர் துரைப்பாண்டி. இவர், இதே பகுதியைச் சேர்ந்த மலைச்செல்வன் என்பவர் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்தார். அவரிடம் 7000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அவர் மதுரையில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கச்சிராயன்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் இடைத்தரகர் பாக்கியலட்சுமி மூலம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக கிராம நிர்வாக அலுவலர் துரைப்பாண்டி மற்றும் இடைத்தரகர் பாக்கியலட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி