குமரி: மயிலாடி அடுத்த இரவிபுதூர் கிராமத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் எஸ். ஐ. திரு.ஜெஸ்ஸி மேனகா தலைமையில் நடந்தது.குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இரவிபுதூர் கிராமத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு அஞ்சுகிராமம் காவல் நிலைய எஸ்.ஐ திரு. ஜெஸ்ஸி மேனகா தலைமை தாங்கினார். இதில் காவலர்கள் கோபு குமார், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எஸ்.ஐ திரு.ஜெஸ்ஸி மேனகா பொதுமக்களிடம் கூறுகையில், லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றமாகும். லஞ்சம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடமோ அல்லது காவலர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் நினைத்தால் லஞ்சத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியும். லஞ்சம் இல்லாத தேசத்தை உருவாக்க முடியும் என்றார்.