திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த பிலாத்து பகுதியை சேர்ந்த அழகர்சாமி மகன் ஜெயபால்(33). இவர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுகுணா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ஜெயபால் வீட்டை சோதனை மேற்கொண்ட போது ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் ஜெயபாலை கைது செய்து அங்கிருந்து 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா