திண்டுக்கல்: திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கீதா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் N.S.நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நந்தவனப்பட்டி, விஜய்நகர் பகுதியை சேர்ந்த லோகநாதன்(28). என்பவர் வீட்டில் தீவனத்திற்காக ரேஷன் அரிசி கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து போலீசார் லோகநாதன் கைது செய்து அவரது வீட்டில் இருந்து 400 கிலோ ரேஷன் அரிசி மற்றும் டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்து திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.