திருநெல்வேலி : திருநெல்வேலி தச்சநல்லூா் நல்மேய்ப்பா் நகா் பகுதியில் (17.02.2025) அன்று காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை சோதனை செய்ததில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரிய வந்தது. இது தொடா்பாக வேனில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில் அவா்கள் திருவண்ணாதபுரம் பொட்டல் பகுதியை சோ்ந்த விக்னேஷ் (23). பத்மநாபமங்களம் ஏசுராஜா (29). கீழநத்தம் கீழுா் நாகராஜன் (21). ஆகியோா் எனத் தெரியவந்தது. அவர்கள் மூவரையும் கைது செய்த தச்சநல்லூர் காவல்துறையினர் வேனுடன் 1200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அவர்களை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்