திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தத்தை மஞ்சி கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில் அங்கு கடத்தவிருந்த ஒரு டன் மதிப்புள்ள ரேஷன் அரிசியை பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார் தலைமையிலான அதிகாரிகள் புதரில் மறைவாக வைக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்ததை மடக்கி பிடித்து கைப்பற்றி பறிமுதல் செய்து வண்டியுடன் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொண்டு வந்து பின்னர் பஞ்செட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி ஓடிய நிலையில் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு