திண்டுக்கல் : திண்டுக்கல் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.பி. விஜயகார்த்திக்ராஜ் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி.ஜெகதீசன் மேற்பார்வையில், ஆய்வாளர் கீதா, சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவலர்கள் பேகம்பூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பேகம்பூர் பகவதி அம்மன் கோவில் அருகே அதே பகுதியை சேர்ந்த அமீர்அம்ஜா(23). தமிமுல் அன்சாரி(25). ஆகிய 2 பேர் ரேஷன் அரிசியை கடத்தி சந்தையில் விற்பனை செய்வதற்கா பதுக்கி வைத்திருந்த 1,250 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா