திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த, வித்தியாசத்தில் உள்ள கோபிநாத சுவாமி கோவில், இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இந்த கோவிலின் கட்டுப்பாட்டில், குச்சலுப்பை பெருமாள், இடையக்கோட்டை செல்லாண்டி அம்மன், சித்தையன் கோட்டை ரதராஜப்பெருமாள் ஆகிய 3 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து, அதிகாரிகள் கோவில் நிலங்கள் தொடர்பாக ஆய்வு செய்து கோவில்களுக்கு சொந்தமான 59 ஏக்கர், 64 சென்ட் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்ததை மீட்டு அந்த நிலங்களில், இது இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட நிலங்கள் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி