தூத்துக்குடி: விருதுநகர் மாவட்டம் திருமலபுரம் அகரத்துபட்டியை சேர்ந்த குருசாமி என்பவரது மகன் முத்துமுருகன் என்பவர் தான் விவசாய பொருள்களை கொள்முதல் செய்துள்ளார்.
விவசாய பொருள்களை வாங்கிய முத்துமுருகன் ஒரு வாரத்தில் 41 பேருக்கும் பணம் தரப்படும் என்று கூறியுள்ளார். இதையெடுத்து விவசாயிகள் ஒரு வாரத்தில் தங்களுக்கு பணம் கிடைத்து விடும் என்று நம்பி இருந்துள்ளனர். ஆனால் 10 நாள்களுக்கு மேலாகியும் பணம் வரவில்லை என்பதால் விவசாயிகள் முத்துமுருகனை தொடர்பு கொண்ட போது இன்று, நாளை என்று இழுத்தடித்துள்ளார்.
பணம் கொடுக்கவில்லை என்றால் காவல்துறையை நாட வேண்டி இருக்கும் என்று விவசாயிகள் கூறியதும். விவசாயிகளுக்கு தர வேண்டிய 14 லட்ச ரூபாய்க்கு 4 லட்சம் வீதம் 3 காசோலை வழங்கியுள்ளார். மீதமுள்ள தொகை பிறகு தருவதாக கூறியுள்ளார்.
இதையெடுத்து காசோலையை வாங்கிய விசாயிகள் தங்களுக்கு பணம் கிடைத்துவிடும் நம்பிக்கையில் ஒரு காசோலையை வங்கியில் செலுத்த அது பணம் இல்லமால் திரும்ப வந்துவிட்டது. இதற்கிடையில் 2லட்சத்து 95 ஆயிர ரூபாய் மட்டும் சில விவசாயிகளுக்கு கொடுத்த முத்துமுருகன் மற்றவர்களுக்கு தரமால் இழுத்தடித்து வந்துள்ளார்.
இதையெடுத்து பொது மக்கள் மாசார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துமுருகனை கைது செய்துள்ளனர்.