கடலூ: சிதம்பரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடலூர் எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் தச்சன்குளம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் வந்த ஒரு காரை நிறுத்திச் சோதனையிட்டதில்,7 கிலோ 600 கிராம் எடையுள்ள திமிங்கல எச்சம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரூ.7.50 கோடி மதிப்பிலான அம்பர்கிரீஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தையும் காரையும் பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த மயிலாடுதுறை மாவட்டம் திருவிழுந்தூரைச் சேர்ந்த ராஜசேகர் (28). என்பவரை கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய வேதாரண்யம் ராஜாவை தேடி வருகின்றனர்
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. ராபர்ட் கென்ன
















