தூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மஞ்சளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே ஓடக்கரை கடற்கரை பகுதியிலிருந்து படகு மூலம் விராலிமஞ்சள் கடத்த இருப்பதாக ஆறுமுகநேரி காவல்துறையினருக்குரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் இந்திரா தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கள் அமலோற்பவம் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய தனிப்பிரிவு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு ஓடக்கரை கடற்கரையில் நின்றிருந்த பதிவெண் இல்லாத பைபர் போர்ட்டில் வெள்ளை நிற மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்த 5 நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். மேற்படி பைபர்போர்ட்டை சோதனை செய்த போது அதில் தலா 30கிலோ எடையுடைய 7 இலட்சம் மதிப்பிலான 72 விராலி மூடைகள் இருப்பது தெரியவந்தது.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் நபர்கள் குறித்து விசாரணை செய்ததில் பாஸ்போர்ட் விசா மற்றும் எவ்வித ஆவணங்களுமின்றி சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தி செல்ல பைபர் படகில் ஏற்றியது தெரியவந்தது.பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்திய பைபர் படகு , லோடுவேன் மற்றும் 3 பைக்குகள்