கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட 76 இடங்களில் ரூ. 69 லட்சத்தில் 198 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா ராயக்கோட்டை காவல் நிலையத்தில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்கதுரை முன்னிலை வகிக்க, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் தலைமை தாங்கி கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்