தேனி: தேனி மாவட்டம் தங்கம்மாள்புரம் கிராமத்தில் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த கலைச் செல்வம் மனைவி ஈஸ்வரி என்ற மாரீஸ்வரி (48). இவர் தங்கம்மாள்புரம் கிராமத்திற்கு கிழக்கே உள்ள குட்டம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக கடமலைக்குண்டு காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து எஸ்.ஐ. திரு. தீபக் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவையும், கஞ்சா விற்பனை செய்து வைத்திருந்த ரூபாய் 47 ஆயிரத்தையும் பறிமுதல் செய்த போலீசார் ஈஸ்வரியும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.