குமரி: குடும்ப மருத்துவர் பேசுவதாக கூறி ரூபாய் 30,000 பணத்தை ‘கூகுள் பே‘ மூலம் அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிதம்பர சுப்பையனிடம் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரிடம் ‘கூகுள் பே‘ வசதி இல்லாததால் வங்கி கணக்கிற்கு ரூபாய் 30,000 அனுப்பி வைத்துள்ளார்.பின்னர் சம்மந்தப்பட்ட குடும்ப மருத்துவரை சந்தித்து கேட்டபோது வேறு யாரோ நைசாக பேசி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிதம்பர சுப்பையன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வசந்தி, சப் இன்ஸ்பெக்டர் திரு.அஜ்மல் ஜெனித் ஆகியோர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.