திருச்சி: ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அதிகளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் காரணமாக புலனாய்வு அதிகாரிகள் சக பயணிகளைப்போல திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்தனர்.அப்போது ஷார்ஜாவில் இருந்த விமான பயணிகளை அவர்கள் நோட்டமிட்டு சந்தேகத்திற்கு இடமான 6 பேரை தனியாக அழைத்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் அவர்கள் கடத்தி வந்த ரூ.3 கோடி ரூபாய் மதிப்பிலான 6 கிலோ தங்கம் சிக்கியது. இதனை தொடர்ந்து அவர்களிடம் விமான நிலைய போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. நிஷாந்த்