திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தாழையூத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் முத்துநாராயணன்.இவர் அதே பகுதியில் நிலக்கடலை பொடி, மரத்தூளை பதப்படுத்தி பாய்லர் எரிபொருள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்த சுக்கம நாயக்கன்பட்டியை சேர்ந்த கலையரசி (43). மானூரை சேர்ந்த ரஞ்சிதா (34). புஷ்பத்தூரை சேர்ந்த கவுதம் (34). ஆகியோர் உதவியுடன் கடந்த 2 ஆண்டுகளாக நிறுவனத்துக்காக மூலப்பொருட்கள் வாங்குவது, அதற்கான வாகனகளுக்கு வாடகை செலுத்தியது, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்தது, உள்ளிட்ட பல்வேறு செலவினங்களுக்கான ரசீது மற்றும் ஆவணங்கள் போலியாக தயாரித்து ரூ.2 கோடி வரை மோசடி செய்துள்ளார்.
இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப்பிடம் முத்துநாராயணன் புகார் கொடுத்தார்.அதன் பேரில் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு DSP.குமரேசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர் வழக்கு பதிவு செய்து கலையரசியை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















