திண்டுக்கல் : திண்டுக்கல் பழனியை தலைமையிடமாக கொண்டு ஸ்ரீநேசா டிரஸ்ட்டை நடத்தி வந்த சேர்மன் செந்தில்குமார், இவரின் மனைவி ஜெயந்தி, மைத்துனர் சக்திவேல் ஆகியோர் கவர்ச்சிகரமான அறிவிப்பு மூலம் ஆசை வார்த்தை கூறி திண்டுக்கல், கோவை, மதுரை, உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 52 பேரிடம் ரூ.10,02,20,000 முதலீடு பெற்று வட்டி தராமல் ஏமாற்றினர். பணம் முதலீடு செய்தவர்கள் அசலை திருப்பிக்கேட்க ஸ்ரீ நேசா டிரஸ்ட் மூடப்பட்டதோடு செந்தில்குமார் உட்பட அனைவரும் தலைமறைவாயினர். இதைத் தொடர்ந்து திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த ஜூலை மாதம் செந்தில்குமார், ஜெயந்தியை கைது செய்தனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான கோவையில் பதுங்கி இருந்த ஸ்ரீ நேசா டிரஸ்ட் உதவித்தலைவர் தீபலட்சுமி (39).யை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது சிறையில் அடைத்தனர்.