தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு. கணபதி மற்றும் போலீசார் நேற்று (23.03.2026) புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யனடைப்பு ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களான மக்சன் சாமுவேல் (23). மற்றும் இசக்கி செல்வம் (27). ஆகியோர் என்பதும் அவர்கள் விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் 8 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனடியாக மேற்படி போலீசார் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















