தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, ரவுடித்தனம், கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பல்வேறு தனிப்படைகள் அமைத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, ரவுடித்தனம், கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பல்வேறு தனிப்படைகள் அமைத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அவர்களை விசாரணை மேற்கொண்டதில் அவர்கள், தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் (1) லெட்சுமணன் (29), கோரம்பள்ளத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் (2) ஜெயக்குமார் (39), தாளமுத்துநகரைச் சேர்ந்தவர்களான சங்கிலி கருப்பன் மகன் (3) விக்னேஷ் என்ற விக்கி (20), மாரிக்குமார் மகன் (4) கண்ணன் (23), தூத்துக்குடி கே.வி.கே நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் (5) மாரிபிரபாகரன் (20) மற்றும் தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த நயினார்தாஸ் மகன் (6) சின்னத்துரை (40) என்பதும், அவர்கள் 2 அரிவாள், 2 கத்தி, கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபடயிருந்தது தெரியவந்தது. உடனே தனிப்படையில் மேற்படி எதிரிகளை கைது செய்து, அவர்களிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வார் ஆர்தர் ஜெஸ்டின் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து வடபாகம் காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் ஜெயந்தி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேற்படி எதிரிகளை கைது செய்த தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுவாக பாராட்டினார்.