சென்னை : தாம்பரத்தில், இருந்து நாகர்கோவில் வரை செல்லும், ‘அந்த்யோதயா’ ரயிலில் இருந்து, கடும் துர்நாற்றம் வீசுவதாக, தாம்பரம் ரயில்வே , காவல்துறையினரருக்கு, நேற்று தகவல் கிடைத்தது. காவல்துறையினர், ஆய்வு செய்ததில், ரயிலின் ஐந்தாவது பெட்டியில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர், இறந்து கிடந்தார். தலையில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில், இருக்கைக்கு அடியில் இறந்து கிடந்தார். அவரின், பெயர் விபரங்கள் தெரியாத நிலையில், இறந்தவர் பிச்சைக்காரராக, இருக்கலாம் என,காவல்துறையினர், தெரிவித்தனர். மேலும், இறப்பிற்கான காரணம் குறித்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.