திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில் நிலையம் பயணிகள் சீட்டு அலுவலகம் அருகே உள்ள பயணிகள் காத்திருப்பு அறையில் அடையாளம் தெரியாத சுமார் (60) வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் காவலர்கள் அடையாளம் தெரியாத அந்த ஆணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா