மதுரை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளநிலையில் மதுக்கடை திறக்கப்படாததால் சிலர் வெளிமாநிலங்களில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும் தினசரி ரயிலில் மதுரைக்கு வந்த பயணிகளிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்,
கர்நாடகாவிலிருந்து மதுரைக்கு வந்த எம்.
சரவணன், முனியசாமி எஸ். சரவணன் ஆகிய மூன்று பேர் சுமார் 25,000 மதிப்பிலான சோதனை செய்த போது 88 மதுபான பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, மதுபாட்டில்களை கடத்தி வந்த மூன்று நபர்கள் மற்றும் மதுபான பாட்டில்களை கைப்பற்றிய போலீசார் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி