மதுரை: சென்னை – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் போதை பொருள் கடத்துவதாக மத்திய போதை தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, மதுரை ரயில்வே நிலையத்தில் வைத்து ரயிலில் வந்த பயணி பிரகாஷ் என்பவரை பிடித்து ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில், அவரிடம் இருந்து சுமார் 30 கிலோ இடையிலான போதை பொருள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, இதன் மதிப்பு சுமார் 90 கோடி என்று கூறப்படும் நிலையில், தற்போது பிரகாசிடம், தீவிரமான விசாரணை என்பது நடைபெற்று வருகிறது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி