திருப்பத்தூர் : திருப்பத்தூர் அசாம் மாநிலம் திப்ரூகர் ரெயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, சேலம் உட்கோட்ட ரெயில்வே தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பொது பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்ததில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ரெயில் பெட்டிகளில் இருந்த பயணிகளிடம் போலீசார் விசாரணை செய்தனர். பையை யார் கொண்டு வந்தது என்று தெரியாததால் பையை கைப்பற்றி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.