திண்டுக்கல் : திண்டுக்கல் சாணார்பட்டி அடுத்த அஞ்சுகுழிபட்டி பகுதியை சேர்ந்த வாய்க்கால்துரை(40). என்பவர் திண்டுக்கல், R.M.காலனி, MGR.நகர் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அப்பகுதியில் கொத்தனார் வேலை செய்து வந்தார். மேலும் மன உளைச்சலுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வேலை முடித்து பின்பு அப்பகுதியில் தண்டவாள ஓரத்தில் அமர்ந்துள்ளார். அப்போது திருச்செந்தூரிலிருந்து பாலக்காடு வரை செல்லும் ரயில் வருவது தெரியாமல் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மேற்படி சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா