திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நாலூர் கம்மவார் பாளையம் என்ற கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பழைய ரப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து. இந்த தொழிற்சாலையில் காலை தொழிலாளிகள் வேலை செய்து கொண்டிருந்த போது அவர்கள் வேலை செய்த கட்டிங் செய்யும் மோட்டார் திடீரென்று தீ பற்றியதால் அருகிலுள்ள வெட்டி எடுக்கப்பட்ட பழைய ரப்பர் துண்டுகள் மீது தீ பரவியதால் அதிகப்படியான கரும்பு புகையோடு தீ கொழுந்து விட்டு எறிய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக எரிந்த இந்த தீயை தீயணைப்பு துறையினர் அதிவிரைவாக வந்து போராடி அணைத்தனர். இதன் மூலம் அருகில் உள்ள பழைய ரப்பர் சீட்களின் மீது தீ பரவாமல் அதை தீயணைப்புத் துறையினர் தடுத்தனர். இதன் காரணமாக சுமார் அரை மணி நேரத்தில் தீயாகப்பட்டது முழுவதும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஒன்றும் இல்லை இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பெயரில் அவர்கள் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு