திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றன. இதுகுறித்து எஸ்பி. திரு. சீனிவாசன் , அறிவுறுத்தலின் படி டிஎஸ்பி. திரு. கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மகேஷ், நகர் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர், எஸ்.எஸ்.ஐ வீரபாண்டியன், காவலர்கள் ஜார்ஜ், ராதா, முகமது அலி, விசுவாசம், ஆகியோர் கொண்ட தனிப்படையினர் , சிசிடிவி காவலர்கள், ஜான், செல்வி உதவியுடன் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மகுடீஸ்வரன் (32), கணேசன் (55), ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றன.