திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் அமைந்துள்ள யோகோஹாமா நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார மையத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
மேற்படி சுகாதார மையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 75 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு நோயாளிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி சுகாதார மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில் உடல்நலத்தை பேணி காப்பது நமது கடமையாகும் என்றும், கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும், முக கவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது மற்றும் எளிய வகையிலான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகள் வழங்கி அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெபராஜ் அவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.