திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப்பகுதி மன்னவனூர் மலை கிராமத்தில் யானை தந்தம் ஒருவரிடம் ஒரு வருடமாக இருப்பதாகவும்,விற்பனை செய்வதற்காக முயற்சிகள் நடப்பதாகவும் தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின கட்டுப்பாடு பிரிவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த இரு தினங்களாக தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின கட்டுப்பாடு பிரிவினர், திண்டுக்கல் வனப் பாதுகாப்பு பிரிவினர் மன்னவனூர் வனச்சரக பணியாளர்கள் ஆகியோர் மன்னவனூர் பகுதியில் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை மன்னவனூர் கைகாட்டி என்ற இடத்தில் வாகன சோதனை செய்ததில் வாகனத்தில் யானை தந்தம் கொண்டு சென்றதை கண்டுபிடித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா