கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட வனப் பகுதியின் எல்லையோரத்தில் உணவு தேடி வந்த யானைக் கு அன்னாசிப்பழத்தில் வெடி மருந்தை வைத்துக் கொடுக்க, அதைச் சாப்பிட முற்படும்போது வாயில் வெடித்து, அதன்பிறகு அது உணவெடுக்க முடியாமல், தண்ணீரில் நின்றபடியே உயிர் விட்டிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகின்றது. அந்த யானை தாய்மையடைந்திருந்து துயரத்திலும் பெருந்துயரம்.
மனிதனை நம்பிய பாவத்திற்கு, வாய் வெடித்து, சித்திரவதை அனுபவித்து, மரணத்திற்காக காத்திருந்ததை என்னும் போது மனசு சொல்லெனாத் துயரத்திற்கு உள்ளாகிறது.
மனிதனின் பேராசை மனிதத்தை
தொலைக்க செய்கிறது.
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்