இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் மாவட்ட காவல் துறையில் செயல்பட்டு வரும் மோட்டார் வாகனப் பிரிவிற்கு புதிய கனரக லாரியை வழங்கினார். இந்த புதிய கனரக லாரி, காவல் துறையின் வாகன பராமரிப்பு, பழுதடைந்த வாகனங்களை மாற்றுதல் மற்றும் போக்குவரத்து தொடர்பான பணிகளை விரைவாகவும் திறம்படவும் மேற்கொள்ள உதவும் என காவல் துறை தெரிவித்துள்ளது. மாவட்ட காவல் துறையின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சேவை பணிகள் மேலும் வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
















